Wednesday, June 11, 2014

கணா காணும் காலங்கள்! 12 ம் வகுப்புமாணவிகளிடம் , ஆசிரியை

"மொத்தமா கூப்பாடு போடகூடாது.....
 ஒவோருத்தரா பதில் சொல்லணும்...சரியா?"

முதல் வரிசையிலிருந்து ஒரு பெண்ணிடம்
(அப்ப நான் எத்தனாவது பெஞ்ச்nu தான கேக்குறீங்க?
 நான் எப்போதுமே மாப்பிள்ளை பெஞ்ச் தான்....)

எங்க...நீ சொல்லு பாக்கலாம்....நீ படிச்சி முடிச்சிட்டு என்னவா ஆகப்போற?

மிஸ்...நான் டாக்டோராகப்போறேன்!

 very good...

Next நீ சொல்லு?....அடுத்த பெண்ணிடம்..

மிஸ்...நான் கலெக்டர் ஆகப்போறேன்!

அப்படியா...good....நீ இன்னும் நல்லா படிக்கணும்...சரியா?

இப்படி வரிசையா பல டாக்டர்களும், இன்ஜினியர்களும், வக்கீல்களும், கலெக்டர்களும், ஜனாதிபதிகளும் உருவாகிக்கொண்டிருக்க....

நான் உண்மையிலேயே சீரியஸ்ஸாக அப்பத்தான் நான் என்ன சொல்லலாம்னு
யோசிகிட்டிருந்தேன்...ஏதாவது வித்யாசமா சொல்லணுமே என்று இல்லாத மூளையை கசக்கி பிளிந்துகொண்டிருந்தேன்........      
                                   
 அனிதா...நீ சொல்லு?

எழுந்திரிச்சு...மிஸ் நான்....உங்களமாதிரி டீச்சராகனும் மிஸ்...

?????
!!!!!!!!!??
???!!!!
!!!!!!!!!

என்ன இவ்வளவு கேப் விட்டிருக்கேன்னு பாக்குறீங்களா?
அங்கேயும் அப்படிதான்....இந்த கேப்பில் இருப்பது போல் மயான அமைதி...
அந்த டீச்சர் கூட எதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டமாதிரி அப்படியே ஷாக் ஆயிட்டாங்க....
                         

பின் பொல்லேன்று அனைவரும் சிரிக்க.....

"நான் டீச்சரைபோல்" என்று சொன்னதால் தான் சிரித்துவிடக்கூடது என்று ஏதோ வேந்தும் வேகாதது மாதிரி டீச்சர் ஒரு mixed emotions ஒன்றை கொடுத்தார்...

ஷ்...சைலென்ஸ்!
உக்காருமா....good! (வேறதாவது சொல்லிவிடுவேனோ என்று பயத்துடன் டீச்சர்)

Next..

என்று அருகில் இன்னொரு பெண்ணிடம் கேள்வியை தொடர்ந்தார்.....

நீ என்னவா ஆகபோறம்மா?......

காலையில் முதல் வகுப்பிலேயே தூங்கும் ஒரே ஜீவன் அந்த பொண்ணுதான்....
லேசாக நான் அவளை இடித்து...ஏய்  உன்னத்தான் மிஸ் கேக்குறாங்க என்று அவளை எழுப்பிவிட......அவளும் பழைய தமிழ் படத்தில் வரும் கற்பழிக்கப்பட்ட கதாநாயகி போல தலையெல்லாம் கலைந்து திடுகேன்று எழுந்து நிற்க..........
                 
                                                 
மீண்டும் வகுப்பில் சிரிப்பு சத்தம்....

அதாம்மா நீ என்னவா ஆகபோறேன்னு கேட்டேன்?

கொஞ்ச நேரம் யோசித்து...மிஸ் எங்க வீட்ல சீக்கிரம் கல்யாணம் பண்ணிவச்சிடுவாங்க. நான் எதுக்கு மிஸ் கஷ்டப்பட்டு படிச்சு.....அந்த ஐடியா எல்லாம் இல்ல மிஸ். எங்க வீட்ல 12th பாசான போதும்னு சொல்லிட்டாங்க மிஸ் ..

அதற்குள் வகுப்பு முடிந்ததற்கான மணி அடித்துவிட்டதால்..டீச்சரும் கிளம்பவேண்டியதாய் ஆயிடிச்சு.....

..................................

அதற்கு பிறகு பத்து வருஷம் ஆயிடிச்சு..
இதில் உண்மையிலேயே காமெடி என்னனா, அந்த வகுப்பில் எப்போதுமே தூங்கிக்கொண்டு கல்யாணம் ஆகி செட்டில் ஆகபோறேன் என்று சொல்லிகொண்டிருந்த அந்த பொண்ணு, இப்போ London இல் மிகப்பெரிய company இல் Quantum Programmer ஆகா இருக்கிறாள்.
                                 
இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, அவள் ஸ்கூல் படிக்கும் காலத்தில் பாசாகுறதே பெரிய விஷயம் ......ஆனால் திடீரென்று நிகழ்ந்த தன தந்தையின் மரணம், தம்பியை படிகவைகவேண்டும் என்ற வைராக்கியம் அவளை வேறொரு ஆளாக மாற்றியது........
                                           

சூழ்நிலைக்கு ஏத்தாமாதிரி கனவுகளும் மாறத்தான் செய்யுது....

என் பையனிடம்....நீ பெரியவனா ஆனப்புறம் நீ என்னவா ஆகபோற என்று ஒவ்வொருமுறை கேட்க்கும்போதும் ஒவ்வொரு பதில் வரும். ஒரு முறை "அம்மா நான் soldier அக போகிறேன்னும், மறுமுறை சம்மந்தமே இல்லாம "கார் டிரைவர்" அகனும்னும் சொல்லுவான்..அவனோட maturity லெவல் மாற மாற கனவும் மாறத்தான் செய்யுது......

என்ன...இப்ப நான் என்ன செய்யுறேன்னு கேக்குறீங்கள?.....
Half Marathon க்காக முயற்சி செஞ்சிக்கிட்டுருக்கிறேன்.......

2 comments:

  1. மாற்றம் ஒன்றே மாறாதது .

    எல்லாரும் கொல்லென்று சிரிப்பார்கள் . நீங்க பொல்லேன்று சிரித்திருக்கிறீர்கள் :)

    ReplyDelete
  2. Can someone tell me how to type Tamil in easy way? Google translator is driving me crazy.... Pls.....

    ReplyDelete