Wednesday, June 11, 2014

கணா காணும் காலங்கள்! 12 ம் வகுப்புமாணவிகளிடம் , ஆசிரியை

"மொத்தமா கூப்பாடு போடகூடாது.....
 ஒவோருத்தரா பதில் சொல்லணும்...சரியா?"

முதல் வரிசையிலிருந்து ஒரு பெண்ணிடம்
(அப்ப நான் எத்தனாவது பெஞ்ச்nu தான கேக்குறீங்க?
 நான் எப்போதுமே மாப்பிள்ளை பெஞ்ச் தான்....)

எங்க...நீ சொல்லு பாக்கலாம்....நீ படிச்சி முடிச்சிட்டு என்னவா ஆகப்போற?

மிஸ்...நான் டாக்டோராகப்போறேன்!

 very good...

Next நீ சொல்லு?....அடுத்த பெண்ணிடம்..

மிஸ்...நான் கலெக்டர் ஆகப்போறேன்!

அப்படியா...good....நீ இன்னும் நல்லா படிக்கணும்...சரியா?

இப்படி வரிசையா பல டாக்டர்களும், இன்ஜினியர்களும், வக்கீல்களும், கலெக்டர்களும், ஜனாதிபதிகளும் உருவாகிக்கொண்டிருக்க....

நான் உண்மையிலேயே சீரியஸ்ஸாக அப்பத்தான் நான் என்ன சொல்லலாம்னு
யோசிகிட்டிருந்தேன்...ஏதாவது வித்யாசமா சொல்லணுமே என்று இல்லாத மூளையை கசக்கி பிளிந்துகொண்டிருந்தேன்........      
                                   
 அனிதா...நீ சொல்லு?

எழுந்திரிச்சு...மிஸ் நான்....உங்களமாதிரி டீச்சராகனும் மிஸ்...

?????
!!!!!!!!!??
???!!!!
!!!!!!!!!

என்ன இவ்வளவு கேப் விட்டிருக்கேன்னு பாக்குறீங்களா?
அங்கேயும் அப்படிதான்....இந்த கேப்பில் இருப்பது போல் மயான அமைதி...
அந்த டீச்சர் கூட எதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டமாதிரி அப்படியே ஷாக் ஆயிட்டாங்க....
                         

பின் பொல்லேன்று அனைவரும் சிரிக்க.....

"நான் டீச்சரைபோல்" என்று சொன்னதால் தான் சிரித்துவிடக்கூடது என்று ஏதோ வேந்தும் வேகாதது மாதிரி டீச்சர் ஒரு mixed emotions ஒன்றை கொடுத்தார்...

ஷ்...சைலென்ஸ்!
உக்காருமா....good! (வேறதாவது சொல்லிவிடுவேனோ என்று பயத்துடன் டீச்சர்)

Next..

என்று அருகில் இன்னொரு பெண்ணிடம் கேள்வியை தொடர்ந்தார்.....

நீ என்னவா ஆகபோறம்மா?......

காலையில் முதல் வகுப்பிலேயே தூங்கும் ஒரே ஜீவன் அந்த பொண்ணுதான்....
லேசாக நான் அவளை இடித்து...ஏய்  உன்னத்தான் மிஸ் கேக்குறாங்க என்று அவளை எழுப்பிவிட......அவளும் பழைய தமிழ் படத்தில் வரும் கற்பழிக்கப்பட்ட கதாநாயகி போல தலையெல்லாம் கலைந்து திடுகேன்று எழுந்து நிற்க..........
                 
                                                 
மீண்டும் வகுப்பில் சிரிப்பு சத்தம்....

அதாம்மா நீ என்னவா ஆகபோறேன்னு கேட்டேன்?

கொஞ்ச நேரம் யோசித்து...மிஸ் எங்க வீட்ல சீக்கிரம் கல்யாணம் பண்ணிவச்சிடுவாங்க. நான் எதுக்கு மிஸ் கஷ்டப்பட்டு படிச்சு.....அந்த ஐடியா எல்லாம் இல்ல மிஸ். எங்க வீட்ல 12th பாசான போதும்னு சொல்லிட்டாங்க மிஸ் ..

அதற்குள் வகுப்பு முடிந்ததற்கான மணி அடித்துவிட்டதால்..டீச்சரும் கிளம்பவேண்டியதாய் ஆயிடிச்சு.....

..................................

அதற்கு பிறகு பத்து வருஷம் ஆயிடிச்சு..
இதில் உண்மையிலேயே காமெடி என்னனா, அந்த வகுப்பில் எப்போதுமே தூங்கிக்கொண்டு கல்யாணம் ஆகி செட்டில் ஆகபோறேன் என்று சொல்லிகொண்டிருந்த அந்த பொண்ணு, இப்போ London இல் மிகப்பெரிய company இல் Quantum Programmer ஆகா இருக்கிறாள்.
                                 
இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, அவள் ஸ்கூல் படிக்கும் காலத்தில் பாசாகுறதே பெரிய விஷயம் ......ஆனால் திடீரென்று நிகழ்ந்த தன தந்தையின் மரணம், தம்பியை படிகவைகவேண்டும் என்ற வைராக்கியம் அவளை வேறொரு ஆளாக மாற்றியது........
                                           

சூழ்நிலைக்கு ஏத்தாமாதிரி கனவுகளும் மாறத்தான் செய்யுது....

என் பையனிடம்....நீ பெரியவனா ஆனப்புறம் நீ என்னவா ஆகபோற என்று ஒவ்வொருமுறை கேட்க்கும்போதும் ஒவ்வொரு பதில் வரும். ஒரு முறை "அம்மா நான் soldier அக போகிறேன்னும், மறுமுறை சம்மந்தமே இல்லாம "கார் டிரைவர்" அகனும்னும் சொல்லுவான்..அவனோட maturity லெவல் மாற மாற கனவும் மாறத்தான் செய்யுது......

என்ன...இப்ப நான் என்ன செய்யுறேன்னு கேக்குறீங்கள?.....
Half Marathon க்காக முயற்சி செஞ்சிக்கிட்டுருக்கிறேன்.......

Thursday, May 8, 2014

முத்தம்!

வீட்டு எதிரில் உள்ள வீட்டில் "For Sale" பலகை... ரொம்ப நாளாக!

இறுதியாக வீடு காலி செய்யும் போது , இந்த  cycle ஐ நீங்க எடுத்துகுறீங்களா? உங்கள் வீட்ல தான் ரெண்டு பசங்க இருக்காங்களே!

Oh, really? Thank you so much என்று நானும் எனது "peter english" ஐ கொஞ்சம் எடுத்து பேசி முடித்தேன்.

 பய்யன்: அம்மா நீயும் நானும் bike ride போலாமா? Please.....

 நான்: இல்ல.. நீ அப்பாவ கூட்டிட்டு போ!

 பய்யன்: Please மா?

 நான்: நான் சின்ன வயசுல cycle ஓட்டுனது, இப்ப வருமோ? வராதோ? (எல்லாம் ஒரு சோம்பேறித்தனம் தான்.)

அவர்: நான் மட்டும் டெய்லி cycle ஓட்டிகிட்டா  இருக்கேன்?

நான்: I'm tired கண்ணா! And I don't have time..( சோம்பெறிதனதிர்க்கு இத்தனை பெயர்கள் உண்டு!)

அவர்:  எதுகெடுத்தாலும் Women's  power, Equal rights, அது  இது னு பேசுவ? நம்ம ஊர்ல இருந்தா ரொம்ப கஷ்டம்! இங்க போனா என்ன?

பய்யன்: அம்மா Please!

நான்: சரி நான் வர்றேன், எனக்கு comfortable இல்லேன்னா நான் வரமாட்டேன்! Ok?

 பய்யன்: Try பண்ணுமா!

 நான்: சரி எங்க போலாம்?

 பய்யன்: நேத்து நம்ம car ல போகும்போது ஒரு குட்டி river பாத்தோம்,ஞாபகம் இருக்கா?

 நான்:ஆமாம்.

 பய்யன்:  அங்க போகலாம்.

 நான்: அது ரொம்ப தூரம் கண்ணா! ( மறுபடியும்...... )

 பய்யன்: அங்க car ல  போகலாம்.

இருவரும் cycle லில் ஒரு சின்ன Lake பக்கத்தில் உள்ள route ல் ஓட்டினோம்.

அவனுக்கு அப்படி ஒரு சந்கோஷம்.
அந்த ஒரு மணி நேரம் முழுக்க அவன்  பெசிகொண்டிருந்தான்......நான்   கேட்டுகொண்டிருந்தேன்.....அவன் என்னிடம் எதிர்பார்ப்பதும் அதுதான்.

 பய்யன்: Amma, Why don't we try to race tomorrow?
 மறைமுகமாக   நாளையும்  என்னை வரச்சொல்லி....
                              
பக்கத்தில் வந்து I love you மா -ன்னு சொன்னான்..

                         அந்த நாளை என்றுமே மறக்க முடியாத படி செய்தான். Suddenly I felt a special bond between me and my son. It's wonderful!

 நான்: I should say thanks to you ra!

அன்றிலிருது இன்று வரி முடிந்தவரை அவனுடன் cycle ride  போவேன்...

 நான் அவனுக்கு கற்று கொடுத்ததை விட , அவனிடம் நான் கற்று கொண்டதுதான் அதிகம்.
 I am very lucky!

இன்று எனக்காக அவன் பரிசாக கொடுத்தது, முத்தம்......

                                      

Happy Mother's day Maa! I love you!Tuesday, April 22, 2014

Starting trouble!

எனக்கு கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபுள். எதுலன்னு கேக்றீங்களா?????
எழுதுறதுக்கு தான்!  எழுதனும்னு நினச்சாலே எனக்கு college ல நடந்த  ஒரு incident நினைவுக்கு வருது.

நானும் என்னுடைய friendம் சேர்ந்து இன்னொரு college க்கு ஒரு சில போட்டிகளில் கலந்துகிட்டோம்.அதுல ஆண்டாள்(கடவுள்) குறித்து பேசணும். என்னோடு சேர்த்து இன்னொரும் பெண்ணும் என்னோட வந்திருந்திச்சு. அந்த பொண்ணுக்கு பேச்சு போட்டினா "அல்வா" சாப்டுற மாதிரி. Prepare ஏ பண்ணாம சும்மா ஆணி அடிச்சாமாறி நச்சுனு பேசும். இருந்தாலும் அந்த பொண்ணு முதல் நாள் ஏதோ "ஆண்டாள்" பத்தி prepare பண்ண, நானும் ஏதோ கொஞ்சம் ஐடியா கொடுக்க, அந்த பொண்ணு சும்மா இல்லாம, "ஏ அனிதா உனக்குள்ள ஏதோ  இருக்கு--நீயும் பேச்சு போட்டியிலே கலந்துகொ...."
அப்டின்னு உசுபேத்த...அதை நானும் நம்பி என் பேரை கொடுத்தேன்.


முதலில் ஒரு பெண்(எங்கள் கல்லூரியை போல் அதுவும் ஒரு  பெண்கள் கல்லூரிதான்)பேசுறாங்க. அரங்கமே சும்மா அதிர்ந்தது. நிறைய கைதட்டல்கள்.
அடுத்தது ஏன் பெயர்தான்.
மேடையிலே நான்....
கைகள் நடுங்க.....பேச ஆரம்பிக்கிறேன். கையில் ஒரு பெரிய பேப்பருடன்...
ரொம்ப கூட்டம் எல்லாம் ஒன்னும் இல்ல. மொத்தமே 3 Judges ஒரு 15 போட்டியாளர்கள் மற்றும் 8 ஆசிரியர்கள்தான்.
வணக்கம் என்றேன். முதலில் வெறும் காத்துதான் வந்தது. பிறகு கொஞ்சம் சத்தமாக,
" வணக்கம். இப்பொழுது பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் பற்றி பார்க்கலாம்.......
................

இத்தோடு என் உரையை முடித்துகொள்கிறேன்" என்று சொல்லி மேடையை விட்டு இறங்கிவிட்டேன்  .
மேடை முழுக்க சிரிப்பு சத்தம். கூடவே என்னை நினைத்து நானே சிரித்து கொண்டேன்.

                                                                     My reaction

அவர்கள் என்னை கூப்பிட்டு "என்னம்மா ஆச்சு" அப்டின்னு கேட்டார். நானும் தலையை சொரிந்து கொண்டு "எல்லாம் மறந்துடுச்சு சார்" அப்டின்னு சொன்னேன். அதற்கு அவர், பேப்பர பாத்தாவது படிச்சிருக்கலாமே அப்டின்னாரு.

ஆள விட்டா போதும்னு வந்துட்டேன்.
என்னோடு வந்திருந்த மற்றொரு பெண் என்னை பார்த்து...சரி சரி நீதான் ஒன்னும் பேசலையே.....அந்த பேப்பரை இப்படி குடு நானாவது யூஸ் பண்ணிக்கிறேன்  என்று புடுங்கிகிட்டா.

அடிப்பாவி(மனசுக்குள்ள)....


அதே பொண்ணு நேத்து போன் பேசுகையில்...
Hey, why don't you write? Really, you have a talent yar!
அப்டின்னு சொல்ல...

இவ நிஜமாத்தான் சொல்றாளா, இல்ல இவ எப்பவுமே இப்படிதானான்னு ஒன்னும் புரியல.....

இப்படி உசிப்ப்பேத்திவிட்டெ பல பேர் வாழுராங்கப்பா என்று நினதுகொண்டு, ஒரு சின்ன நம்பிக்கையுடன் நானும் எழுத ஆரம்பித்தேன்!